திருநாளைப்போவார்185நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

சரணங்கள்.

சொல்லும்பொருளுமற்றுச் சோதிமயங்கொண்
டல்லும்பகலுமற்ற வம்பலவாணன் (தொண்)

அஷ்டதிசையும்பரி பூரணமாகவே
மட்டிலாதுவளர்ந் தோங்கியநாதன் (தொண்)

வாசியடங்கிநடு வணைவழிகண்டால்
தேசிகவடிவுடன் தெரிசனந்தந்திடும் (தொண்)

பாலகிருஷ்ணன்பணிந் தேத்தியபாதன்
கோலச்சிலம்பணியுங் குண்டலநாதன் (தொண்)

___________

ராகம் - ஹிந்துஸ்தான் காபி ;  தாளம் - ஆதி.

பல்லவி.

திருநாளைப்போவார் தெரிசனங்காணத்
தில்லைமூவாயிர முனிவர்கள்வருகிறார் (திருநாளை)

சரணங்கள்.

பத்திவெள்ளமது கரைபுரண்டோடும்
பரமானந்தக் கடல்முழுக்காடும் (திருநாளை)

அரகரசங்கர சிவனென்றுசொல்லும்
அநித்தியசடதுக்க மாயத்தைவெல்லும் (திருநாளை)

அடியவரேமெத்தப் பெரியவரென்று
அம்பலவாண ரருள்விடைகொண்டு (திருநாளை)

இதுவுமது  ;  சிந்து.

ராகம் - சௌராஷ்ட்ரம்  ;  தாளம் - ஆதி.

பல்லவி.

தேடித்தேடித்திரிந்தார்   பாரும்-நந்தனார்தம்மைத்
தில்லைமூவாயிரவர்    யாரும்.