திருநாளைப்போவார்188நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

அடையலர்திரிபுர மனலாகவே                முடித்த
   வன்பாகமான்மழு வங்கையிலே             பிடித்த
விடைப்பாகனேகாளி வெட்கும்படி              நடித்த
   மெய்யாதுயர்தவிர்த்தா ளையாவென்றே     படித்த
       வாறுநீயறிந்தருள் செய்                யையனே
       வனஜநிகர்பத சரணத்                  துய்யனே (உனது)

அன்னைசிவகாமி யனுதினம்வளர்             தில்லை
   யம்பொன்னகர்வருவோர்க் காங்கொருதுய  ரில்லை
உன்னையன்றியுலகத் துக்குப்பொரு           ளில்லை
   யுத்தமனேயெங்கட் குரியதுணையு          மில்லை
       ஓதுநந்தனார் தம்மைவரச்             செய்யும்
       ஊழின்வினைதவிர்த் தவர்க்கு அருள்செய்யும் (உனது)

_________

வசனம்.

இவ்விதமாகச் சுவாமியைத் துதித்துத் தில்லை மூவாயிரவர்களனைவரும்
நந்தனாரைத் தேடி யலுத்துவருமார்க்கத்தில், ஒருபுறமாக நின்றுகொண்டிருந்த நந்தனார்
வேதியர்களைக் கண்டு தூர விலகி நின்று தலைவணங்கிச் சொல்லுகின்றார்.

விருத்தம்.

திட்டமுட னடிபணிந்து மனமொடுங்கித் தவம்புரியுந் தில்லைமன்று
ணட்டமிடு நடராஜன் கனவின்கண் சொன்னமொழி நம்பிக்கொண்டு
இட்டமுடன் றிருநாளைப் போவார்பால் வேதியர்க ளேகும்போது
கிட்டநெருங் காதேயு மெனவிலகி யோர்வார்த்தை கேளீரென்றார்.

ராகம் - பூரிகல்யாணி  ;  தாளம் - ரூபகம்.

பல்லவி.

கிட்டநெருங்கி வரவேண்டாஞ்சுவாமிகாள்-காதில்
கேட்டபேர்க்கும் பாவம் வருமெனது ஜன்மம். (கிட்ட)