அனுபல்லவி.
சிட்டர்புகழுந் தில்லைதன்னில் செழித்துவாழும்
வேதியர்கள்
இஷ்டமிது வல்லவேயென்று சொல்லவேணு மோபுலையன் (கிட்ட)
சரணங்கள்.
உலகினில்கடைச்சாதி யெந்தனுக்
குவமை யாருமில்லையே
பலவிததுஷ் கருமஞ்செய்து
பாரில்வந்த புலையனையே (கிட்ட)
வேலைசெய்து வுடம்பு வளர்க்க
வேணுமிந்த நாயடியேன்
தோலுமெலும்பு முதுகினில் சுமந்து
அலையும் புலையனையே (கிட்ட)
செத்தமாடிழுப்ப தெனது சேவகம்பரம்
படித்துமெல்லை
சுற்றிவந்து தமுக்கடித்துச்
சுடலைகாக்கும் புலையனையே (கிட்ட)
_________
வசனம்.
இப்படி வணங்கிச்சொல்லிய
திருநாளைப்போவாராகிய நந்தனாரைப்பார்த்து
வேதியர்கள்
சொல்லுகின்றார்கள்.
ராகம்-சுரடி ; தாளம் -
ரூபகம்.
பல்லவி.
சாதியிலுயர்ந்தாலென்ன-இந்தப்-பேறும்பெருமையுமில்லையே.
சரணம்.
சாதிபெருமைகொண்டதாலே
சங்கரனா ரருகில்வந்து
ஆதரவுடன்வரங்களீந்து அழைப்பாரோ சேர்ப்பாரோ
அளிபெருகவேயீசன் கழலை யறிவிலுன்னி யடிபணிந்து
தெளிந்திடாத பேரைமுத்தி தேடுமோ நாடுமோ
கூடுமோ (சாதியி)
|