துக்கடா.
ராகம்-நவரோஜ்; தாளம்-ஆதி.
ஆதனூரிலொரு வேதியர்க்குள்ளே
அடிமைக்காரப் பறையன்
சூதுவாதுமொன்றுந் தெரியாதவன்பரி
சுத்தமான பத்தன்
கோதிலாததங்கள் ஜாதியர்க்குச்சிவ
குணங்களை மிகச்சொல்லி
காதலோடுதிருப் புன்கூரீசனைக் கண்டுவருவோ
மென்றார்.
வசனம்.
நந்தனார் சிவதரிசனஞ் செய்யவேண்டியதற்காக
தங்கள் ஜாதியாரைக்
கூப்பிடுகின்றார்.
ராகம்-ஜந்ஜூடி; தாளம் -ரூபகம்.
பல்லவி.
ஊ
சிவலோக நாதனைக்கண்டு சேவித்திடுவோம் வாரீர்
அனுபல்லவி.
பவபயங்களைப் போக்கி
அவர்
பரம பதத்தைக் கொடுப்பா ரந்த
(சிவ)
சரணங்கள்.
அற்பசுகத்தை நினைந்தோம் அரன்திருவடி
மறந்தோம்
கற்பிதமான ப்ரபஞ்சமிதை கானல்ஜலம்போலே
யெண்ணி (சிவ)
ஆசைக்கடலில் விழுந்தோமதால்
அறிவுக்கறிவை யிழந்தோம்
பாசமகலும் வழிபடாமல் பரிதபிக்கும்
பாவியோனோம் (சிவ)
மானிடஜன்மங் கொடுத்தார்தன்னை
வருந்தக்கரங்க ளளித்தார்
தேனும்பாலும் போலேசென்று தேரடியில்
நின்றுகொண்டு. (சிவ)
ஊ இந்தக் கீர்த்தனையை
நவீனர்கள் “மாயாமாளவ கௌள” ராகத்திலும்
பாடுகிறார்கள்.
|