வசனம்.
இப்படிச் சொல்லிய வேதியர்கள்
தாங்கள் வந்த காரியம் பேசுவார்.
திருநாளைப்போவார் புராணம்
விருத்தம்.
ஐயரே யம்பலவ ரருளாலிப்
பொழுதணைந்தோம்
வெய்யவழ லமைத்துமக்குத்
தரவேண்டி யெனவிளம்ப
நையுமனத்திருத்தொண்டர்
நானுய்ந்தே னெனத்தொழுதார்
தெய்வமறை முனிவர்களுந்
தீயமைத்த படிமொழிந்தார்.
வசனம்.
ஐயரே, நடேசருடைய கட்டளையால்
இப்போது வெவ்விதாகிய அக்கினியை மூட்டி
உம்மை அதில் மூழ்கும்படிக்குச் சொல்ல
வந்தோமென்று சொல்ல, இளகிய
மனத்தையுடைய திருநாளைப்போவார் அடியேன்
கடைத்தேறினேனென்றும் அவர்களைத்
தொழுது நானின்றைக்குத்தான் முக்தனானேனென்றும்
வேதியர்களைப் பார்த்துச்
சொல்லுகின்றார்.
ராகம்-பேஹாக் ; தாளம் -
ஆதி.
பல்லவி.
கண்டேன்
கலிதீர்ந்தேன்-பவக்-கடற்கரை
யேறிவந்தேன்.
சரணங்கள்.
சோதிமறைமுடியுஞ்
சொல்லிறந்திடுமீசன்
பாதம்பணிவிடைசெய் பாக்கியம்பெறுமும்மைக்
(கண்)
|