திருநாளைப்போவார்191நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

எல்லையைக்காணுமுன்னே யிருள்விலகுமுங்கள்
சொல்லைக்கேட்குமுன்னே துன்பங்கள்தீர்ந்திடும் (கண்)

கள்ளங்கருகச்செய்யுங் கண்ணுதலேயுங்கள்
உள்ளங்குடியாய்க்கொண் டாருங்கள்தரிசனம். (கண்)

---------

வசனம்.

நந்தனார், தான் சின்னஜாதியாயிருந்தபோதிலும் தெய்வ மிரங்கிற்றோவென்று
சந்தோஷங்கொண்டு சொல்லுகின்றார்.

ராகம்-தன்யாசி ;  தாளம் - ஆதி.

பல்லவி.

எனக்குமிரங்கிற்றோ-நான்மெத்த-ஏழைச்சாதியல்லவோ.

அனுபல்லவி.

தனக்குள்தானாயிருந் தகிலப்பிரபஞ்சமுந்
      தன்னுள்ளடக்கிய பொன்னம்பலவன்கிருபை (எனக்கு)

சரணங்கள்.

அல்லும்பகலு மருந்தவஞ்செய்கினு
   மறியாரொருவரு மம்பலத்தெய்வம் (எனக்கு)
நான்மறைமுடிவும் நானறியேனென்று
   வோதியவுண்மையை யுலகமறிந்திட (எனக்கு)

வசனம்.

நந்தனார், என்னதவம் செய்தேனோ இவ்வுலகின்கண் யாருக்கும் கிடைக்காத
பாக்கியம் தனக்குக் கிடைத்த தென்று சொல்லுவார்.