திருநாளைப்போவார்192நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

கண்ணிகள்.

ராகம் - ஆஹிரி ;  தாளம்-மிச்ரஏகம்.

அம்பலவாணனைத் தென்புலியூரானை
நம்பிப்பணிந்             தேனோ - அர்ச்சனை செய்து
கும்பிட்டிருந்             தேனோ
தில்லைப்பதியில்வந்து எல்லைகடந்தேனென்று
அல்லலறுத்             தேனோ - சஞ்சிதவிதை
யெல்லாம்வறுத்         தேனோ
தாண்டவமாடின ஆண்டவன்சேவடி
வேண்டித்துதித்           தேனோ - முக்குணங்களைத்
தாண்டிக்கதித்             தேனோ
எந்தனெனதென் றெந்தவேளையுமாயுஞ்
சிந்தைநழு               விற்றோ - சேர்ந்தவனென்று
தந்தைதழு               விற்றோ
தெள்ளுதமிழ்ப்பாடி யுள்ளமுருகியுன்னில்
கள்ளங்கரு               கிற்றோ - கருத்திலெட்டா
வெள்ளம்பெரு           கிற்றோ
ஆசைவலையைப்போட்டு மோசப்படுத்துஞ்சீவ
பாசங்குலைத்            தாரோ - அளவிடாத
கிலேசந்தொலைத்        தாரோ
பெண்ணாரிடுமாலுக் கொண்ணாதெனச்சடைத்
தண்ணால்தணித்          தாரோ - கருணைபொங்குங்
கண்ணாலணைத்          தாரோ
அடுத்துவந்தவனென்று பிடித்தபேய்களையோட்டி
தடுத்தாளக்கொண்        டாரோ - பரமபதங்
கொடுத்தாளக்கொண்      டாரோ.

___________