திருநாளைப்போவார் புராணம்.
விருத்தம்.
மறையவர்கண் மொழிந்ததற்பின் றென்றிசையின்
மதிற்புறத்துப்
பிறையுரிஞ்சுந் திருவாயின் முன்னாகப் பிஞ்ஞகர்தம்
நிறையருளான் மறையவர்க ணெருப்பமைத்த குழியெய்தி
இறையவர்தாண் மனங்கொண்ட யெரிசூழ வலங்கொண்டார்.
வசனம்.
நந்தனார், இப்படிப்
பிராமணர்கள் சொல்லியபின்பு தென்திசையிலுள்ள
மதிலின்புறத்திலே சந்திரனானது தவழ்ந்துபோகும்படி
உயர்ந்திருக்குந்
திருக்கோபுரவாயிலுக்கு
முன்னே சுவாமியின் நிறைந்த கிருபையோடுகூடிய
கட்டளையால்
வளர்ந்திருக்கின்ற நெருப்பின்
குழியை அடைந்து நடேசருடைய திருப்பாதத்தை மனத்தில்
தியானித்து அக்கினியைச் சுற்றி
வலமாக வந்தார்.
இதுவுமது - விருத்தம்.
கைதொழுது நடமாடுங் கழலுன்னி
யழல்புக்கார்
எய்தியவப் பொழுதின்க
ணெரியின்க ணிம்மாயப்
பொய்தகையு முருவொழித்துப்
புண்ணியமா முனிவடிவாய்
மெய்திகழ்முந் நூல்விளங்க
வேணிமுடிக் கொண்டெழுந்தார்.
வசனம்.
நந்தனார் கையினாற் கும்பிட்டு
நடனஞ்செய்கின்ற நடேசரது திருப்பாதங்களை
மனத்தில் உறுதியாக நினைத்து அக்கினியிற்
புகுந்து அந்த நெருப்பிலிருந்து இந்த வுலக
சம்பந்தமாகிய நிலையில்லாத சடலத்தை
யொழித்துப் புண்ணியஞ்செய்கின்ற
பெருமைபொருந்திய பிராமண முனிவடிவ
|