திருநாளைப்போவார்194நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

மாய்த் தேகத்தில் பூணூல்விளங்கச் சடைமுடியோடும் வெளியில் வந்தார்.

---------

ராகம் - மோஹனம்  ;  தாளம் - ஆதி.

பல்லவி.

யாகோற்பவமானார்-நந்தனார்-அரனருளால்
யாகோற்பவமானார்.

அனுபல்லவி.

யோகமாதவரும் போகவாழ்வினரும்
வேகமாய்ச்சுக மாகவந்துதொழ (யாகோ)

சரணங்கள்.

சிவனாருரைத்த         வாக்கியம்-சித்தத்திலெண்ணிச்
   சிறந்ததேமிக         சிலாக்கியம்
தவறாவநேக            பாக்கியம் - பொருந்தவேடந்
   தன்னைக்கொண்டதே  யோக்கியம்
தபனனோடுஉயர்        ககனமேவிவரு
   மெவரும்காந்தருவ   ரெவருங்கண்டுதொழ (யாகோ)

கையைச்சிரமேற்        பதித்துச் - சிவனேயென்று
   கனகசபையைத்      துதித்துச்
செய்யகுண்டத்தை      வெடித்துக் - கதிரவன்போற்
   செனித்தாரதிலே     நடித்துச்
சித்தியாகியபத         முற்றும்பாம்புபுலிப்
   பத்தியாய்த்தொழும்ப தத்தைக்கண்டுதொழ (யாகோ)

காதிற்குண்டலம்          துலங்க - முப்புரிநூலுங்
    கதித்துமார்பிட       மிலங்க