திருநாளைப்போவார்195நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ஓதுஞ்சடைகள்           விளங்க - அவரைவிட்டு
    ஓடியேவினை        கலங்க
ஏதமற்றசதுர்             வேதமோதிவரும்
    நீதவேதியர்கள்       பேதமின்றித்தொழ (யாகோ)

________

திருநாளைப்போவார் புராணம்.

விருத்தம்.

செந்தீமே லெழும்பொழுது செம்மலர்மேல் வந்தெழுந்த
அந்தணன்போற் றோன்றினா ரந்தரதுந் துபிநாதம்
வந்தெழுந்த திருவிசும்பில் வானவர்கண் மகிழ்ந்தார்த்துப்
பைந்துணர்மந் தாரத்தின் பனிமலர்மா ரிகள்பொழிந்தார்.

வசனம்.

சிவந்தநெருப்பில்நின்று எழுந்தபொழுதுசெந்தாமரைப் புஷ்பத்தின்மேல்
உதயமாயெழுந்தருளும் பிரமாவைப் போல் பிரகாசித்தார். பெருமைபொருந்தியஆகாசத்தில்
அந்தர துந்துபியின் கோஷமானது உண்டாயிற்று. தேவர்கள் சந்தோஷமாய் ஆரவாரித்து
அழகாயிருக்கின்ற கற்பக விருட்சத்தின் குளிர்ச்சிபொருந்திய மலர்களை வருஷமாகச்
சொரிந்தார்கள்.

விருத்தம்.

திருவுடைய தில்லைவா ழந்தணர்கள் கைதொழுதார்
பரவரிய தொண்டர்களும் பணிந்துமனங் களிபயின்றார்
அருமறைசூழ் திருமன்றி லாடுகின்ற கழல்வணங்க
வருகின்றார் திருநாளைப் போவாரா மறைமுனிவர்.