வசனம்.
ஞானசம்பத்தையுடைய
தில்லையில்வாழும் பிராமணர்கள் கைகூப்பினார்கள்.
பரவுதற்கரிய மற்றைச் சிவபத்தர்களுந் தொழுது
மனத்தில் களிப்படைந்தார்கள். வேதங்கள்
முழங்குகின்ற கனகசபையில் ஆடுகின்ற பாதத்தை
வணங்கும் பொருட்டுத் திருநாளைப்
போவாராகிய வேதமுனிவர் தாம் கண்ட ஆனந்தத்
தாண்டவத்தை வருணித்துச்
சொல்லுகின்றார்.
-------------.
ராகம்- தேசிகதோடி ;
தாளம் - ஆதி.
பல்லவி.
தாதெய்யென்றாடுவார்-அவர்-தத்தித்தெய்யென்றாடுவார்.
அனுபல்லவி.
ஆதிபராபர மாகியசித்து
ஆனந்தங்கொண்டொரு
காலையெடுத்துத் (தாதெய்)
சரணம்.
அண்டசராசர மெங்கும்நடுங்க
ஆதிசேடனார் முடிகணெருங்க
(தாதெய்)
சீலம்பெருகிய முனிவர்கொண்டாடத்
திங்களைச்சூடிய செஞ்சடையாடத்
(தாதெய்)
பார்புகழுந்தில்லைச்
சிதம்பரநாதன்
பாலகிருஷ்ணன்பணிந்
தேத்தியபாதன் (தாதெய்)
-----------.
|