திருநாளைப்போவார்197நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ராகம் - பந்துவராளி  ;  தாளம் - ரூபகம்.

பல்லவி.

குஞ்சிதபாதத்தைத் தாரும்-மன-சஞ்சலபாவத்தைத் தீரும்.

அனுபல்லவி.

செஞ்சிலம்பசையக் கனகசபைதனில்
ஜெணுதத்தக ஜெணு தத்திமி திமிதத்-தோமென்றாடிய (குஞ்சித)

சரணங்கள்.

நெஞ்சிற்கவலையை           யாற்றும்- இந்த
வஞ்சப்பிறவியை              மாற்றும் - நாளும்
வஞ்சிசிவகாமிவல்லி           மகிழ்ந்திடும்
தஜ்ஜெம்தக-ஜெம்தரிகட தக்கிட தோமென்றாடிய (குஞ்சித)

சரணமென்றிங்கேநான்           வந்தேன் - ஜனன
மரணத்தினால்மிக              நொந்தேன் - அந்தக்
கரணக்கல்மிஷங்கள் போக்கியே காத்திடும்
இந்திரர்வானவர் மாமுனி - வந்து நிதந் துதிசெய்திடும் (குஞ்சித)

பாலகிருஷ்ணன்றொழும்        பாதா - முத்தி
நால்வர்க்குதவிய             நாதா - எந்தன்
மேலேகிருபைசெய்து வெற்றி  யளித்திடும்
அத்தனே கர்த்தனே சுத்தனே யித்தனை-நிர்த்தனஞ் செய்திடும். (கு)

------,

ராகம் - மாயாமாளவகௌள  ;  தாளம் - ரூபகம்.

பல்லவி.

நடனமாடினார் - ஐயர்- நடனமாடினார்.