திருநாளைப்போவார்198நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

அனுபல்லவி.

நடனமாடினார்தில்லை நாயகர்பொன் னம்பலந்தனில்
தாகுஜணுத - தகஜம்தரி-தகஜணு - தகதிமி -தித்தோம் - தத்தாளங்கு
தகதளாங்கு - தகதிக - ததிங்கிணதோமென்று (நட)

சரணங்கள்.

முக்திமடைந்தை   சித்திக்கச்    சித்திக்க
மோகவலைகள்    பத்திக்கப்    பத்திக்க
பத்தர்கள்மனது    திக்திக்கத்    திக்திக்கப்
பாதச்சிலம்பு      சத்திக்கச்     சத்திக்கப்
பனிமதி சடையாடப் பதஞ்சலிமாமுனி மறைபாடப்
பண்ணவர்கள் கொண்டாடப் பலகிருஷ்ணன் மத்தளம்போட (நட)

________

ராகம் - வஸந்த ; தாளம் - அட.

பல்லவி.

நடனமாடினார்-வெகுநாகரீகமாகவே
கனகசபையில் ஆனந்த (நடன)

அனுபல்லவி.

வடகைலையில்முன்னாள் மாமுனிக்கருள்செய்தபடி
தவறாமல்தில்லைப்பதியில்வந்து
தைமாசத்தில் குருபூசத்தில் பகல்நேரத்தில் (நடன)

சரணம்.

அஷ்டதிசையும் கிடுகிடென்று-சேடன்தலைநடுங்க
அண்டமதிரக் கங்கைத்துளிசிதர பொன்னாடவர்கொண்டாட
இஷ்டமுடனேகோபாலகிருஷ்ணன் பாட சடையாட
அரவ படமாட-அதிலேநடமாட-தொந்தோமென்று-பதவிகள்
தந்தோமென்று (நடன)