ஞாலம்புகழுஞ் சீல
போதன்
சுந்தரர்தூதன் அம்பிகை
நாதன்
(ஆன)
வசனம்.
இப்படி ஆடிய தாண்டவ
தரிசனங்கொடுக்க இன்றைக்குத்தான் சித்தமிறங்கிற்றோ
வென்று சொல்லுவார்.
_____________
ராகம் - யமுனாகல்யாணி ; தாளம் -
ஆதி.
பல்லவி.
சித்தமிரங்கிற்றோ
யான்முன்செய் தவமுத்திற்றோ.
அனுபல்லவி.
அத்தா பரி சுத்தாவுன் னாடல்காண
வந்தேன் (சித்த)
சரணங்கள்.
சாதிமுறைபோக்கும் என்னைச் சதுர்மறையவராக்கும்
போதா தில்லை நாதாவுன் னாடல்காணவந்தேன்
என்னையாண்டுகொள்ளி துவே சமயமுன்னாடல்காணவந்தேன்
(சித்)
பாலகிருஷ்ணன் போற்றும்பாதா பதஞ்சலியாரேத்துஞ்
சீலா திரி சூலாவுன் னாடல் காணவந்தேன்
என்னையாண்டுகொள்ளிதுவே சமையமுன் னாடல்காணவந்தேன்
(சித்)
சிந்து.
கனவிலுருவாகி-வந்து-காட்சிகொடுத்துக்
கடாக்ஷித்தபின்
எரியினிடைமூழ்கி-வெகு-இன்பம்பெருகிய வன்பருடன்
வேதமுனிவடிவாய்த்-தில்லை-வேதியர்கைதொழு தாதரவாய்
அங்கம்புளகிதமாய்ச்-செம்பொன்.
|