வசனம்.
திருநாளைப்போவாராகிய
முனிவர் அக்கினியில் குளித்தெழுந்து
கனகசபையில்
வந்து மனமுருகி ஆனந்தம்பெருகி நமது ஆண்டவராகிய
நடேசமூர்த்தியையும்
கோவிந்தராஜரையும் சேர்த்துத் தோத்திரம்
செய்கின்றார்.
______________
ராகம்-சுரடி; தாளம் - சாபு.
பல்லவி.
தில்லையம்பலத்தானைக்
கோவிந்தராஜனைத்
தெரிசித்துக்கொண்டேனே
அனுபல்லவி.
தொல்லுலகமும்
படியளந்து மனதுக்கேற்கும்
தொண்டர்கலிகள்தீரக் கருணைப்பொழியுமெங்கள்
(தி)
சரணங்கள்.
தும்பைப்பூமாலைகள் தொடுத்துக்கொடுப்பதிங்கே
துளஸிக்கொழுந்தெடுத்து தொட்டுக்கொடுப்ப தங்கே
அம்பலரஹஸியம் அறிந்துகொள்ளுவதிங்கே
அஷ்டாக்ஷரமென்று அன்புசெய்வதுமங்கே
பிட்டுவடையுடனே நைவேத்யமுமிங்கே
புளியோதனம் தயிரன்னம் படைப்பதங்கே
கொட்டுமுழக்குடனே கூத்தாடுவதிங்கே
குரட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருப்பதுமங்கே.
(தி)
தேவாரமும்திரு வாசகப்படிப்பிங்கே
திருவாய்மொழியோதி ஸேவித்திருப்பதங்கே
|