நாவில்பஞ்சாக்ஷரம் நாடிக்கொள்ளுவதிங்கே
நாராயணாவென்று நம்பிக்கொள்வதுமங்கே (தி)
சொல்லறியாத்திருக் கூட்டம்கூடுவதிங்கே
தோத்திரத்துக்கேற்பக்
கருடஸேவையுமங்கே
அல்லும்பகலும் அன்ன தானசிறப்பிங்கே
அய்யங்கார்கள்கூடு மாரவாரமங்கே (தி)
தேனும்புழுகும்பாலும் தேடிக்கொள்ளுவதிங்கே
சிறக்கபணிகள் பூட்டும் சிங்காரமுமங்கே
மானும்மழுவுடனே மகிழ்ச்சிகொள்ளுவதிங்கே
வலம்புரிசங்கு சக்கரமும்தரிப்பதங்கே (தி)
பரமசிவனேயென்று பாடிக்கொள்ளுவதிங்கே
பாலகிருஷ்ணாவென்று பணிந்துகொள்ளுவதங்கே
அருமறை பொருளுக்கெட் டாதவடிவமிங்கே
ஆனந்தமூர்த்தியென்று ஆதரிப்பதுமங்கே (தி)
___________
ராகம் - சரசாங்கி ; தாளம் - ஆதி.
பல்லவி.
உனதுதிருவடி நம்பிவந்தேன்-எனக்
கொருவருமில்லைநா னேழை. (உனது)
அனுபல்லவி.
அனுதினமும் பொன்னம்பலந்தனிலே
ஆடியபாதரே யென்சுவாமி. (உனது)
சரணங்கள்.
இரவும்பகலும் விஷயாதிகளென்னை
யிழுக்கும்நானதை
மரித்துமிப்படிபர தவித்திடலானேன்
|