பார்க்கலாமோபால
கிருஷ்ணன்போற்றும்பரனே
பரமதயாநிதியே நின்பக்தியைத்தந்து
சித்தமகிழ்ந்திடக் கரையேற்றிடுவதுன்பாரஞ்
சொன்னேன் கைவிடவேண்டாம் சரணம் சரணம் (உனது)
___________
ராகம்-சக்கரவாகம், மிஸ்ரஜாதி ;
தாளம்-ஜம்பை.
பல்லவி.
அறிவுடையோர்பணிந்தேத்தும்
தில்லைக்
கனகசபாபதியே எனையாளும் (அறி)
அனுபல்லவி.
மறமுடியுந்தேடி யறியாதவுன்றன்
திருவடியைமாணிக்கவா சகரறிந்ததெப்படி (அறி)
சரணங்கள்.
கனவிலும் நினைவிலும் விஷயாதிசம்
சாரக்கடலி
லழுந்திக்கரையேறவும் வழிகாணேன்
மனமிரங்கிக்ருபை செய்திடவேணும்-மாயன்கோபால
கிருஷ்ணன் தொழுதேத்தும்-அம்பலவாணா
உனைமறந்திடப்போமோ -உன்னடியார்களைப்
பணிவீரென்றுரைத்திடுமுண்மையையின்னமுமறியேன்
மனைவிமக்கள் தன தானியமென்றிந்த
மாயவலைக்குள் சிக்கி மயங்கினேன் தயங்கினேன்
(அறி)
____________
ராகம் - நவரோஸ் ; தாளம் - ஆதி.
பல்லவி.
தில்லைநடராஜரைப்போலே
வேறெதெய்வம்கிடைக்குமோ
|