அனுபல்லவி.
பதஞ்சலிவியாக்கிர பாதருக்கன்று
பாதமெடுத்தாடவே
பாதமெடுத்தாடவே-அவர்கள்-பரமபதத்தைச்சேரவே
(தில்)
சரணங்கள்.
காளியுடன்வாதாடியே
கனகசபையில்நின்றநீ
கனகசபைதனில்நின்று-ஒற்றைக்-காலைத்தூக்கிக்கொண்டாடிய
(தில்)
பொங்கவேபரமானந்தகூபம் பூரணகும்பத்தில்வருகவே
பூரணகும்பத்தில்வருகவே ஐயன்-பொன்னம்பலத்தைச்சேரவே
(தில்)
குடத்தில்கங்காதீர்த்த மெடுத்துக்
கும்பாபிஷேகம் பண்ணவே
கும்பாபிஷேகம்பண்ணவே-அப்பன்-குளிர்ந்தமனதுஆகவே
(தில்)
அத்தர்புனுகு வாசனையுட னாகுதிஹோமம்
பண்ணவே
ஆகுதிஹோமம்பண்ணவே-ஜகதீசன்-சிற்சபைதனைச்சேரவே
(தில்)
___________
ராகம்-ஸு ரடி ; தாளம் - ஜம்பை.
பல்லவி.
கனகசபைத் திருநடனம் கண்டுகளித்
தானந்தமடைந்தேன்.
அனுபல்லவி.
சனகசனந்தன
முனிவர்கள்பாடச்
சதுர்முகதேவனும் தாளங்கள்போடத்
தினமுமூவாயிரம் பேர்களுங்கூடத்
திக்கிடதைய்யதித்தோம் தத்தோமென்று (க)
சரணம்.
நந்திபிருங்கிசிவ
கணங்களும்கூட
நாரதர்தும்புரு
சங்கீதங்கள்பாடப்
|