பந்திபந்தியா
யமரர்கொண்டாடக்
கோபாலகிருஷ்ணன் மத்தளம்போட
(கனக)
__________
ராகம் - பூர்ணசந்த்ரிக ; தாளம் -
ஆதி
பல்லவி.
பாதமேதுணை
ஐயனே-நின்
பாதமேதுணை ஐயனே.
அனுபல்லவி.
பாதமேதுணை யல்லால்
வேறொரு
சேதிகளு நானறிந்
திலேன் (பாத)
சரணம்.
பாலனுக்கருள்
செய்த பராபரன்
பாலகிருஷ்ணன் கவிக்குத்தயாகரன்
சீலமுள்ள சிவ காமி மனோகரன்
கோல நடம்புரி ரஞ்சித குஞ்சித
(பாத)
__________
ராகம்- ஸரஸ்வதிமனோஹரி ; தாளம்
- ஆதி.
பல்லவி.
வந்தாலும் வரட்டும்-ஜனனம்
தந்தாலும் தரட்டும்-சாமி.
அனுபல்லவி.
செந்தாமரைப்பதமே
கதிநம்பினேன்
சிதம்பரநாதன்
சிவசாயுச்சியம். (வந்தா)
|