சரணம்.
சிவன்செயலன்றி
வேறொருசெயலும்
சிந்தையிலறியேன் பாலகிருஷ்ணன்தொழும்
அவனுருவன்றி
வேறுருவுண்டோ
ஆகமமறியாதோ,
தவமேவுந்தென்
புலியூர்வாழும்
தாண்டவனேயென் னாண்டவனே-இந்தப்
பவக்கடல்தாண்ட விடுவாயதுவொரு
பாரமல்லவெகு
தூரமல்லமுக்தி (வந்தா)
ராகம் - ஆரபி ; தாளம் - ஆதி.
பல்லவி.
பிறவாத வரந்தாரும் -
என்னையா
பிறவாத வரந்தாரும்.
அனுபல்லவி.
அறிவுடையோர்தொழு
தேத்தியதில்லைப்பொன்
னம்பலவாயின் னம்பலயோனியில்
(பிற)
சரணம்.
எண்பத்துநாலு லட்சம் ராசிகளில்
எடுத்தெடுத்துப்பிறந் திறந்ததோ
புண்பட்டதுபோதும்போதும்-இனிமேல்
புத்திதெரிந்ததையே
நண்பற்றிடுமனைவி மக்கள்வாழ்வினில்
நாள்கடோறும்மனவி லாசம்கழிந்ததும்
இன்பத்துடனேகோ பாலகிருஷ்ணன்தொழு
தேத்திய ஜக தீசனே நடராஜனே.
(பிற)
___________
|