அவர்கள்- சேரியிலுள்ள சீரிதுவென்றார்.
நந்தன் - வந்தபுலையருக்குப்
பக்திபெருகவே
நெற்றியில்திரு நீறையுமிட்டார்.
அவர்கள்- சத்தியந்தானென்று மெத்தவுங்
கும்பிட்டு
பிரியமுடனவர் பின்னையும் சென்றார்.
ராகம்-வராளி; தாளம்-சாபு.
இவர்- சிங்காரமான
பள்ளு
பாடினார்
அவர்- அங்கங்குளிர்ந்து கொண் டாடினார்
இவர்- கோரோசனைப் பையை யெடுத்தார்
அவர்- தாராளமாய் வாரிக் கொடுத்தார்
இவர்- சிவமந் திரஞ்சொல்லிச் சேவித்தார்
அவர்- தவமிஃதே யென்றுச் சரித்தார்
இவர்- ஆசைப் பெருங்கடல் தாண்டினார்
அவர்- ஓசைப் படாமலே வேண்டினார்
இவர்- அளவில்லா தானந்த மடைந்தார்
அவர்- அளவில்லாக் காக்ஷி பெற்றிருந்தார்
இவர்- திருப்புன்கூ ரீசனைப்
பாடினார்
அவர்- விருப்பமோ டிவரைக்கொண்
டாடினார்.
____________
வசனம்.
இப்படி எல்லோரும்
கூடிச் சிவனை அடிக்கடி வணங்கி ஹரஹரா வென்றுரைத்திடும்
சப்தம் பரமனேயறிவார். இப்படி நந்தனார் பதினொருபேர்
பறையரோடு திருப்புன்கூர்
வந்து சேர்ந்தார்.
|