திருநாளைப்போவார்212நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

சிந்து.

அம்பலமேவிய சம்பிரமத்தைக்-கண்டாரறிந்திலரால்.

__________

திருநாளைப்போவார் புராணம்.

விருத்தம்.

தில்லைவா ழந்தணரு முடன்செல்லச் சென்றெய்திக்
கொல்லைமான் மறிக்கரத்தார் கோபுரத்தைத் தொழுறைஞ்சி
ஒல்லைபோ யுட்புக்கா ருலகுய்ய நடமாடும்
எல்லையினைத் தலைப்பட்டார் யாவர்களுங் கண்டிலரால்.

வசனம்.

திருநாளைப்போவார் நாயனாரென்றும். இடையில் நந்தமா முனியென்றும்
வழங்குகின்ற நாளைப்போவார் தில்லை மூவாயிரமுனிவர்களோடு பொன்னம்பலத்துக்கு
வந்தார். அதற்கப்பா லவரைக் கண்டபேர்களில்லையென்று பெரியபுராணம்பாடியருளிய
சேக்கிழார்சுவாமிகள் சொல்லியிருக்கிறார். அந்தத் திருநாளைப்
போவாரென்னுமுனியானவர், புரட்டாசிமாதம் உரோகணிநட்சத்திரத்தில் கனகசபையில்
வந்து கற்பூரசோதியைப்போற் றோன்றிய சிவசாரூப்பியத்தை யடைந்தாரென்று உபமன்னிய
மகரிஷி பண்ணிய பக்த விலாசத்திலேயும் சொல்லப்பட் டிருக்கின்றது.

இதுவுமது - விருத்தம்.

அந்தணர்க ளதிசயித்தா ரருமுனிவர் துதிசெய்தார்
வந்தணைந்த திருத்தொண்டர் தம்மைவினை மாசறுத்துச்
சுந்தரத்தா மரைபுரையுந் துணையடிக டொழுதிருக்க
அந்தமிலா வானந்தப் பெருங்கூத்த ரருள்புரிந்தார்.