வசனம்.
மறையோர்கள் ஆச்சிரியப்பட்டார்கள்.
அரிய முனிவர்கள் தோத்திரம்செய்தார்கள்.
முடிவில்லாத ஆனந்தத்தாண்டவஞ் செய்தருளுகின்ற
சபாநாதர் தமது கட்டளையால்
வந்தடைந்த திருநாளைப்போவாருக்குத் தீவினையாகிய
களங்கத்தை நீக்கி அழகாகிய
செந்தாமரை மலரையொத்த இரண்டு பாதங்களையுந்
தொழுதிருக்கும்படியாகத் திருவருள்
புரிந்தார்.
இதுவுமது - விருத்தம்.
மாசுடம்பு விடத்தீயின்
மஞ்சனஞ்செய் தருளியெழுந்
தாசின்மறை முனியாகி யம்பலவர் தாளடைந்தார்
தேசுடைய கழல்வாழ்த்தித் திருநாளைப்போவாரும்
மாசகல முயன்றுதிருநடங்கண்டு மகிழ்வுற்றார்.
வசனம்.
தமக்கு முன்னிருந்த
உடலமாகிய
மாசுதீரும்பொருட்டு அக்கினியாகிய
திருமஞ்சனமாடியெழுந்து குற்றமற்ற பிராமண முனிவடிவமாகி
ஸ்ரீநடேசப்பெருமானுடைய
திருவடியை அடைந்தவராகிய திருநாளைப்போவாருடைய
பாதத்தைப் புகழ்ந்து
தீவினையாகிய கயிறு அறும்படி தில்லை மூவாயிர
முனிவர்கள் போற்றிசெய்து
கொண்டிருந்தார்கள்.
வாழ்த்து - விருத்தம்.
பங்கய மாதவர் வாழி
பார்மக ளுமையாள் வாழி
செங்கண்மா லயனும் வாழி
தேவர்கந் தருவார் வாழி
தங்குநான் மறைகள் வாழி தாரணி யரசர்வாழி
பொங்குநூல் வல்லார் வாழி புண்ணிய ரென்றும்வாழி.
___________
|