திருநாளைப்போவார்214நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

மங்களம்.

ராகம் - அசாவேரி ; தாளம் - ஆதி.

பல்லவி.

திருநாளைப்போவாருக்கு        ஜயமங்களம்-எங்கள்
தில்லைமூவாயிரவர்க்குச்       சுபமங்களம்

அனுபல்லவி.

இருடிகளிதுவரி தரிததிசயமென
விருகரமுடிமிசை மருவத்துதிசெய்கன
பரவுமும்பர்சம்பிரமங்கள் துதித்திடும்
பரமனாடுமம்பலத்தில் கதித்திடும் (திருநா)

சரணங்கள்.

திருவாசகமுந்திருக் கோவைபாடினவர்க்கும்
      சீர்காழியிலுதித்த சிறந்தசம்பந்தருக்கும்
ஒருமாதிடத்திற்றூதுக் குவந்துவிடுத்தவர்க்கும்
      ஒருவரொப்பில்லாத் திருநாவுக்கரசருக்கும்
உரியமறைக்கு-முயர்கலைகட்கும்
      உரகர்பதிக்கு-முவணபதிக்கும்
ஓதுசந்திரசூரியர் முனிவர்களுக்கும்
      தீதிலாதபாவலர் முதலனைவர்க்கும். (திருநா)

திருநாளைப்போவாரென்னும்

நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

முற்றிற்று.