உ
சிவமயம்.
சிதம்பரக் கும்பி
______
விநாயகர் துதி.
சீர்மேவுந்தில்லை
யம்பலத்தில்அன்பு
சேரக்கும்மித் தமிழ்பாடக்
கார்மேவுமேலைக் கோபுரவாசல்
கற்பகப்பிள்ளையார் காப்பாமே.
(1)
முக்குறுணி விநாயகர் துதி.
சர்க்கரைமோதகந்
தேங்காயுங்கொண்டு
சந்நிதிமுன்பாகத் தான்படைத்து
முக்குறுணிப்பிள்ளையாரைவேண்டி
முழங்கிக்கும்மி யடியுங்கடி. (2)
சுப்பிரமணியர் துதி.
கோலமயிலின் முதுகேறிவந்து
கும்பமுனிக்கு வருட்செய்யும்
பாலசுப்பிரமணியன் பீஜாக்ஷரத்தைப்
பாடிக்கும்மி யடியுங்கடி. (3)
கங்காதேவிக்குக்
கைகூப்பியாருங்
கையிலெடுத்துள்ளே பானம்பண்ணி
தங்காமற்சிவ காமிசந்திதி
சார்ந்துகும்மி யடியுங்கடி. (4)
|