சவாயி.
ராகம்-கேதாரம்; தாளம்-மிச்ர
ஏகம்.
தலம் வந்து வீதி வலம் வந்து
கண்கள்
ஜலம் வந்து சோரும் பலன் வந்து எங்கள்
குலஞ் சுத்தமாச்சு மலம் வெந்து
போச்சு
நலங் கண்டோமென்று நிலங்கொண்டு நின்றார்.
வசனம்.
அந்தத் தலத்திலே
நந்தி மிகவும் பெரிதானபடியினாலே சிவலிங்கதரிசனஞ்
செய்வதற்கு நந்தி மறைத்திருப்பதால், நந்தனார்
துயரமடைந்து
சொல்லுகின்றார்.
கண்ணிகள்
ராகம்-சங்கராபரணம்; தாளம்-ஏகம்.
ஹரஹராத்ரிபுராந்தக
ஜீவாதாராவெங்கள்
அம்பிகையொரு பாகா
எங்கும்
நிரந்தரமாயெள்ளு ளெண்ணெய்போலவிருந்து
நினைப்பவர்க்கருள் போகா
வெள்விடைமேல்வரும் விமலநமசிவாய
விளங்கும்வேத முடிவே நால்வர்க்குத்
தெள்ளுறச்சிவஞான போதமளிக்கவந்த
சிறந்தமெய்த்தவ வடிவே
மானுமழுவுந்தமருக வாகுவலயமும்
மருவுஞ்சூல பாணி எளி
யேனுங்காணத்தரி சனைதரவுமை யுட
னெழுந்தருள்வீரிங்கு தோணி
மன்னும்சந்நிதிமுனம் மருவுமிடப தேவர்
மறைந்திருக்கநினைக் காணேனே
முன்னம்
|