திருநாளைப்போவார்23நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

என்னவினைசெய்தேனோ கண்பெற்ற பாவந்தானோ
    இதயத்தில்மகிழ்ச்சி பூணேனே.

____________

சவாயி.

ராகம் - கேதாரம்; தாளம்-மிச்ர ஏகம்.

சிவலோகநாதன் திருச்சந்நிதானம்
மலையாகியநந்தி மறைத்திடுதிங்கே
பலகாலஞ்செய்த பாழ்வினைகுவிந்து
மலையாகியிப்படி மறைத்ததோவென்றார்.

வசனம்.

என்று சொல்லிய நந்தனார் பின்னுஞ் சொல்லுகின்றார்.

ராகம் - தேசிகதோடி; தாளம்-ஆதி.

பல்லவி.

*வழிமறைத்திருக்குதே மலைபோலே
ஒரு மாடுபடுத்திருக்குதே. (வழி)

அனுபல்லவி.

பாவிப்பறையனிந்த வூரில்வந்து மிவன்
பாவந்தீரேனோ உன்தன்
பாதத்தில் சேரேனோ ஏறேனோ
சிவலோகநாதா மாடு (வழி)

* இந்தக் கீர்த்தனையை நவீனர்கள் “மாயாமாளவ கௌள” ராகத்திலும் பாடுகிறார்கள்.