திருநாளைப்போவார்24நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

சரணம்.

தேரடியில்நின்று தரிசித்தாலும்போதும்
கோவில்வர மாட்டேனே ஐயே
ஓரடிவிலகினால்போது மிங்கேநின்று
உற்றுப்பார்க்கச்சற்றே விலகாதோ மாடு (வழி)

வசனம்.

இப்படி நந்தனார் தரிசனங்காண ஓயாமல் மனம் வருந்தும்போது சுவாமி
நந்தனார்மீதிரங்கி நந்தியை விலகச் சொன்னார்.

ராகம் -ஹம்ஸத்வனி; தாளம் - ரூபகம்.

பல்லவி.

*சற்றே விலகியிரும் பிள்ளாய் சந்நிதான மறைக்குதாம் நீ (சற்)

அனுபல்லவி.

நற்றவம்புரியு நம்மிடதிரு நாளைப்போவார் வந்திருக்கிறார் (சற்)

சரணங்கள்

சாதிமுறைமை பேசுறான் தன்னையிகழ்ந்து மேசுறான்
கோதிலாக்குணமுடையோன் கோபங்கொண்டால் தாளமாட்டாய் (ச)

வேதகுலத்தைப்போற்றுறான் விரும்பிவிரும்பி யேற்றுறான்
பூதலத்தி லிவனைப்போலே புண்யபுருஷ னொருவனில்லை (ச)

பத்தியில்கரை கண்டவன் பார்த்துப்பார்த்து உண்டவன்
சித்தங்குறையில் நமதுசெல்வம் முற்றுங்குறையுந் தயவுசெய்து (ச)

* இந்தக் கீர்த்தனையை நவீனர்கள் “பூரிகல்யாணி” ராகத்திலும் பாடுகிறார்கள்.