திருநாளைப்போவார்25நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

துக்கடா.

ராகம்-ஜந்ஜூடி; தாளம் - ரூபகம்.

ஒருநாளும்வாராத பக்தன் திருநாளைப்போவாரெனும் சித்தன்
உலகெங்கும் ப்ரஸித்தம்கண்டுஒதுங்காமலிருந்தது உன்பேரில்குற்றம்

பெரியபுராணச் செய்யுள்.

விருத்தம்.

சீரேறு மிசைபாடித் திருத்தொண்டர் திருவாயி
னேரேகும்பிட வேண்டு மெனநினைந்தார்க் கதுநேர்வார்
காரேறு மெயிற்புன்கூர்க் கண்ணுதலார் திருமுன்பு
போரேற்றை விலங்கவருள் புரிந்தருளிப் புலப்படுத்தார்.

வசனம்.

இப்படி சுவாமி சொல்ல நந்தி விலகி நின்றார்.

துக்கடா.

ராகம்-நவரோஜ்; தாளம்-ஏகம்.

நந்தி தூர விலகிநின்றார் தன்சாமி மனதைக் கண்டார்
இவன் நல்ல பக்தனென்றார் அடங்காத வெட்கங் கொண்டார்.

ராகம்-ஸாவேரி; தாளம் - ரூபகம்.

பல்லவி.

மற்றதெல்லாம் பொறுப்பேன்
முத்திநாலும் கொடுப்பேன் (மற்ற)

சரணங்கள்.

பக்தனுக்குக் குற்றஞ்செய்தால்
அதைப் பொறுக்கமாட்டேன் (மற்ற)