திடுக்கென்றவரை
துடிக்கப்பேசி
அடிக்கப் பொறுக்கமாட்டேன் (மற்ற)
பசிக்குதென்று வருகையிலொருவன்
புசிக்கப் பொறுக்கமாட்டேன் (மற்ற)
வசனம்.
இப்படி சுவாமி சொல்லும்போது நந்தி
மனதுகலங்கி தூர விலகி நின்றார்.
நந்தன் சிந்தைகுளிர்ந்து
அளவில்லாத ஆனந்தமடைந்து குதித்தார், கெக்கலித்தார்,
கொண்டானடித்தார், துதித்தார், திருவடியுள்ளே
பதித்தார், எங்கும் சிவமாகப் பாவித்தார்.
கட்கா.
ராகம்-நாதநாமக்கிரியை;
தாளம்-ஏகம்.
குதித்தார் எக்கலித்தார்
உள்ளங்களித்தார்
பள்ளுபடித்தார் கண்ணீர்வடித்தார் பற்களைக்கடித்தார்
ஒருதரந் துடித்தார் இருதரம் நடித்தார்
இப்படி தரிசனஞ்செய்தார் நந்தனார்
தரிசனஞ்செய்தாரே.
துக்கடா. தாளம் -
ஆதி.
சட்டமாக சந்நி தானங்கண்டுதுடை
தட்டினார் கைகொட்டினார்
அஷ்டமூர்த்தியெ வருக்குமென்றுகூத் தாடினார்
பண்பாடினார்
கஷ்டமானசம் சாரசாகரந் தாண்டினார் மெய்வேண்டினார்
இஷ்டதெய்வ சிவலோகநாதனை எண்ணினா ருள்ளநண்ணினார்
மட்டிலாதசந் தோஷங்கொண்டுதான் பட்டபாடுகளைப்
பேசினார்
ஜன்மங் கெட்டதென்று தன்னை பேசினார்
இஷ்டமானதன் ஜனங்களோடவர்-கட்டிமுத்தமிட்
டுலாவினார்
சிங்கக் குட்டிபோலவே யவர்தாவினார்
|