ராகம்- கல்யாணி; தாளம்-அட.
பல்லவி.
தரிசனஞ்செய்தாரே-நந்தனார்-தரிசனஞ்செய்தாரே.
அனுபல்லவி.
தரிசனஞ்செய்தார்
தேன்மழைசொரிந்து
வரிசையுடன் அவர் வாழி வாழியென்று
(தரிசனஞ்)
சரணங்கள்.
குதித்துக் குதித்துக் கையைக்
கும்பிடு போட்டுத்
துதித்துத் துதித்துத் தன் துன்பங்கள்
தீர (தரிசனஞ்)
போற்றி போற்றி யென்று
பொன்னடி வணங்கிப்
பார்த்துப் பார்த்துப் பரமானந்தங்
கொண்டு (தரிசனஞ்)
அச்சமறந்தவ ரறிவி லுணர்ந்
தவர்
இச்சையிழந்தவ ரேகாக்ர சித்தராய்
(தரிசனஞ்)
ராகம்-ஈசமனோஹரி; தாளம்
- ஆதி.
பல்லவி.
சம்போ கங்காதரா சந்த்ரசேகரா
ஹர
அனுபல்லவி.
அம்பலவாணரே ஆதிரை
நாளரே
அடைக்கலமென்று நம்பி வந்தேன்
ஆதரிப்பதுன் பாரம் சொன்னேன் (சம்போ)
சரணங்கள்.
தாயுந் தந்தையும் நீ
உன்னைத்தவிர வேறே யொருவரு மில்லை
மாயன் கோபால கிருஷ்ணன் பணியும்
மலரடி பணிந்தேன் பிறவியைத்
தீரும் (சம்போ)
|