வசனம்.
தரிசனம் பண்ணியபின்பு கொண்டுவந்த
பணிவிடை செலுத்தி அவ்வீதியில்
மட்டையூறுங்
குட்டையை குளமாய் வெட்டவேணுமென்று விசாரமுற்றார்.
சுவாமி
இதையறிந்து நாளைப்போவாராலே குளம்வெட்ட
தாளப்போகாதென்று தன் பிள்ளையை
ஆளாகப் போகச்சொன்னார்.
இருச்சொல்லலங்காரம்.
மாளாப் பிறவிபோக்கும்
பிள்ளையார் வந்தார்.
நாளைப்போவார்- நீ-யாரப்பா
வென்றார்
பிள்ளையார் - நான்உன்-னாளப்பா
வந்தே னென்றார்
நாளைப்போவார்- குட்டையைக்
குளமாய் வெட்டுவே னென்றார்
பிள்ளையார் - வெட்டினால் மிகு
புண்ய மென்றார்
நாளைப்போவார் - அதெம்மட்டு
மெட்டு மென்றார்
பிள்ளையார் - குளம்வெட்டும்
வெட்டு மென்றார்
நாளைப்போவார் - அற்பமாய்
பதக்கு நெல்லைக் கொடுத்தார்
பிள்ளையார் - அப்பனேயிது
போதும் போதுமென் றுரைத்தார்
நாளைப்போவார் - களித்து நிர்விகற்பமா
யிருந்தார்
பிள்ளையார் - குளத்தை வெட்டுதற்
கிசைந்தார்
ராகம் - மோகனம்; தாளம் -
ஆதி.
பல்லவி.
தடாகமொன்றுண்டாக்கினார்-கணநாயகர்
தடாகமொன்றுண்டாக்கினார்
அனுபல்லவி.
சடாமகுடதரன்-சாம்பவி
யுடன்வர
சகலமுனிவர்மனத்-தாமரை யுமலர
|