திருநாளைப்போவார்30நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வசனம்.

இதெல்லாம் சிவன்செயலென்று சந்தோஷங்கொண்டு முன்போலவே கோவிலை
வலம்வந்து தன்னுடன்வந்த பதினொரு பேர்களுடன் ஆதனூர் வந்து சேர்ந்தார்.

பெரியபுராணச் செய்யுள்.

விருத்தம்.

இத்தன்மை யீசர்மகிழ் பதிபலவுஞ் சென்றிறைஞ்சி
மெய்த்திருத் தொண்டுசெய்து விரவுவார் மிக்கெழுந்த
சித்தமொடுந் திருத்தில்லைத் திருமன்று சென்றிறைஞ்ச
உய்த்தபெருங் காதலுணர் வொழியாது வந்துதிப்ப.

நொண்டிச்சிந்து.

ராகம் - புன்னாகவராளி; தாளம்-மிச்ர ஏகம்.

பேணிச்-சாருந்தொழின்முறை யாரும்புகல்
திருப்புன்கூர்ச் சென்றரனைக்-கண்டு-சேவித்திசைபாடி-பாவித்தபின்
தில்லைச்சிதம்பரத்தைக் கண்டு-சேவிக்கவேண்டுமென் றாவலுடன்
நாளைப்போவே னென்றாராம்.

வசனம்.

நந்தனார் திருப்புன்கூர் சிவலோகநாதனைத் தரிசனம் செய்து ஆதனூர்
வந்தநாள்முதல் ஊணுறக்கமுதலானதும் விட்டார்; தில்லையம்பலம் திருச்சிற்றம்பலமென்று
சொல்லத் தலைப்பட்டார்; சேரியிலுள்ள பெரியோர்களைக் கூப்பிட்டார்; வணங்கிக்
கும்பிட்டுச் சொல்லுவார்:-

ராகம்-பியாக்; தாளம்-ஆதி.

பல்லவி.

சிதம்பரம் போவேநான்-நாளைச் சிதம்பரம் போவேநான்