சக்திக்கிணையான
பாதம் - வேத
சாஸ்த்ரங்கள் நாலுந் தேடிய
பாதம்
(காணா)
காலனைச்சீறிய
பாதம் - சன
காதிகளுக்குள்ளே செலுத்திய
பாதம்
மாலயன்தேடிய
பாதம் - எங்கள்
மாணிக்கவாசகர் பீடிகை
பாதம்
(காணா)
ஆசையைப்போக்கிய
பாதம் - பர
மானந்தவெள்ளத்தி லாடிய
பாதம்
வாசம்பொருந்திய
பாதம் - தில்லை
மாகாளிதாழவே தூக்கிய
பாதம் (காணா)
பாலகிருஷ்ணன்தொழும்
பாதம் -
காட்டில்
பாம்புபுலிக்குக்கூத் தாடிய
பாதம்
கோலச்சிலம்பணி
பாதம் - தில்லைக்
கோவிந்தராயர் தரிசிக்கும்
பாதம்
(காணா)
__________
வசனம்.
நந்தனார் சிவனைக்
காணாமல் காலம் வீணாகப் போக்க லாகாதென்று
தம்
இனத்தாரைக்
கூப்பிடுகின்றார்.
துக்கடா.
ராகம்-பியாகு; தாளம்-ரூபகம்.
பல்லவி.
ஊஎல்லோரும்
வாருங்கள்
சுகமிருக்குது பாருங்கள் நீங்கள் (எல்லோரும்)
ஊ இந்தக் கீர்த்தனையை
நவீனர்கள் “கேதார” ராகம் “ஆதி” தாளத்திலும்
பாடுகிறார்கள்.
|