திருநாளைப்போவார்34நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

சரணம்.

நல்லோர்பணிந்திடுந் தில்லையம்பல
நாதன்பாதம் பணிந்துகொள்வோம். (எல்லோரும்)

கண்ணிகள்.

ராகம் - ஸௌராஷ்ட்ரம்; தாளம்-மிச்ர ஏகம்.

பல்லவி.

வாருங்கள் பரமானந்த மிருக்குது பாருங்கள்.

சரணங்கள்.

சடமெடுத்தபின்     னேதுமே கண்டிலீர்
விடமெடுத்துண்ட    மேனியன் தேர்வர
வடம்பிடித்திட      வாருங்கள் தில்லையில்
இடம்பிடித்துநா      மெல்லோரும் வாழலாம் (வாருங்கள்)

சொல்லடாதில்லைச்  சிற்றம் பலமென்று
மெல்லடாவாயைச்    சந்நிதி நேரவே
நில்லடாயிந்த        மாயப் பிறவியைக்
கொல்லடாசிவ        லோகங் குடிபுக (வாருங்கள்)

சள்ளடாநம            தில்லற வாழ்க்கையைத்
தள்ளடாநந்தன்        சொல்லுறுதி யென்று
கொள்ளடா            தில்லை யம்பலத்தாண்டவன்
பள்ளடாவென்று        பாடிக் கூத்தாடியே. (வாருங்கள்)

__________

வசனம்.

இப்படி வாருங்களென்று அழைக்கப் புலையர் வாராமலிருக்க நந்தனார் நல்ல
வார்த்தையைச் சொல்லிப் பறையரை சிவநாமத்தைச் சொல்லச்சொன்னார்.