திருநாளைப்போவார்35நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

இருசொல்லலங்கார வாக்குவாதம்.

நந்தனார் - தில்லையம்பலமென்று சொல்லச்சொன்னார்
புலையர்
- கள்ளப்பேச்சென்று மெள்ளச்சொன்னார்
நந்தனார்
- சங்கராவென்று சொல்லச்சொன்னார்
புலையர்
- இங்கேவாவென்று நிற்கச்சொன்னார்
நந்தனார்
- சற்றேயாகிலும்சிவனை த்யானம்பண்ணென்றார்
புலையர்
- நத்தையோடுபாலை பானம்பண்ணென்றார்
நந்தனார்
- திருச்சிற்றம்பலமென்று ஜபிக்கச்சொன்னார்
புலையர்
- வெறுச்சகம்பளமென்று உறக்கச்சொன்னார்
நந்தனார்
- சேரியில் நல்லகாரியமீதென்றார்
புலையர்
- ஏரியில் நல்லமாரியீதென்றார்
நந்தனார்
- விட்டநாள்நினையாம லெட்டுநாள் மறவாமல்
            நிஷ்டை பண்ணாதசென்மம் நஷ்ட மென்றார்
புலையர்
- விட்டவிரை முளையாமல் நட்டபயிர் பலியாமல்
            கெட்டுதானால் கிராமம் நஷ்ட மென்றார்
நந்தனார்
- உங்கள் புலைத்தன்மை போகுமென்றார்
புலையர்
- எங்களைக் கெடுத்தாயே பாவியென்றார்
நந்தனார்
- தேவாதிதேவனை தரிசிப்பீரென்றார்
புலையர்
- பாவாடைராயனைப் பாவிப்பாயென்றார்
நந்தனார்
- அனைத்தாளுமீசனுக் கன்புசெய்யென்றார்
புலையர்
- இனத்தாரைநொந்தவர்க் கின்பமேதென்றார்
நந்தனார்
- தினமும்சிவனைப்போற்றிக் களிப்போமென்றார்
புலையர்
- பதரைத்தூற்றிநெல்லை யளப்போமென்றார்
நந்தனார்
- பெண்ணாசைபொன்னாசை விடுதலேநன்றாம்
புலையர்
- என்னாளுமுன்னாலே கெடுதலையுண்டாம்
நந்தனார்
- அப்பனோடு இஷ்டமுட நானிருப்பேனென்றார்
புலையர்
- கப்பலோட்டியகடன் கொட்டைநூற்றால்தீராதென்றார்