திருநாளைப்போவார்37நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

இருசொல்லலங்காரம்.

கண்ணிகள்.

ராகம்-பூரிகல்யாணி; தாளம்-ஏகம்.

நந்தனார் - சிவனேதெய்வம் சிதம்பரமேகைலாசம்
            தவமேபெருமை தான்சம்ப்ரதாயம்

புலையர் - சேரியேசொர்க்கம் ஏரியேகைலாசம்
            மாரியேதெய்வம் மதசம்ப்ரதாயம்

நந்தனார் - படிப்பதுஞானம் பார்ப்பதுமூலம்
            குடிப்பதுமதிப்பால் குலசம்ப்ரதாயம்

புலையர் - பிடிப்பதுநண்டு புசிப்பதுஇறைச்சி
            குடிப்பதுகள்ளு குலசம்ப்ரதாயம்.

நந்தனார் - பாழைக்கடப்பார் பரவெளிதாண்டி
            கோழையறுப்பார் குலசம்ப்ரதாயம்

புலையர் - ஆழத்தில்குளிப்போம் அருங்கோடைவந்தால்
            கூழைக்குடிப்போம் குலசம்ப்ரதாயம்

நந்தனார் - ஆசையைப்போக்கி ஐம்புலனைச்சுட்டு
            மாசற்றவாழ்வு மதசம்ப்ரதாயம்

புலையர் - பூசைகள்புரிவோம் பொன்னேருழுவோம்
            கூசாமல்வாழ்வோம் குலசம்ப்ரதாயம்

நந்தனார் - மையத்திலாடி மனக்கயிறுபூட்டி
            வையத்திலிருப்பார் மதசம்ப்ரதாயம்

புலையர் - கையிலேகலையம் காலிலேசேறு
                        பையிலேபாக்கு பறைசம்ப்ரதாயம்.

____________