திருநாளைப்போவார்38நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வசனம்.

சிவபக்தி பண்ணினால் அணிமாவாதிசித்திகள் அடையலாமென்று நந்தனார்
சொல்லுகின்றார்:

ராகம்-நீலாம்பரி ; தாளம்-ஜம்பை.

பல்லவி.

வாருங்கள் வாருங்கள் சொன்னேன்-நீங்கள்
வாயாடா தோடி வருவீரென் முன்னே

சரணம்.

நந்தனார் - அஷ்டமா சித்திகளைப் பெறலாந்-தில்லையில்
                  ஆனந்தத் தாண்டவன் கோவிலைக் கண்டு
            இஷ்டமுடன் வீதி வலம்வந்து-ஈசன்
                  இணையடி தொழுதார்க் கினிப்பிறப்பில்லை. (வாருங்கள்)

புலையர் - கருமணி பிச்சோலை போதும்-உன் தன்
               கள்ளவேஷ மெங்களுக்குக் கிடையாது
            பருகுவது கூழ்க்கஞ்சி போதும்-வாய்
               பதறி வார்த்தைகள்பேசிப் பசப்பாதே போடா.

______________

வசனம்.

நந்தனாரைப் பார்த்துப் பறையர், “நீ சொன்படி கேட்பதில்லை; எங்கள்
உண்மையறியாமல் நீ மயங்காதே” யென்று சொல்லுகிறார்கள்:

ஏசல்.

புலையர் - பார்ப்பார தெய்வமது பலிக்காது பறையரைக்
            காப்பாற்ற மாட்டாது கைவிடு மென்றார்