நந்தனார் - பார்ப்பார்
பறையறென்று பாராது பரிதிபோல்
காப்பாற்று மல்லவோ கண்ணுதலே யென்றார்
புலையர் - அடுக்காத
வார்த்தையை அல்லும்பக லோதியே
பிடிக்கிறாய்
பிடிவாதம் பேசாதே யென்றார்
நந்தனார் - கடுக்காயைத் தின்பாரோ
கன்ன லதுபோலே
கொடுக்காத தானாலும் கொள்ளுவீ ரென்றார்
புலையர் - பித்தனென்று
சொல்லுவார் பேருலகி லெல்லோருஞ்
சத்யமி தல்லவோ தள்ளுவீ ரென்றார்
நந்தனார் - பித்தனா யிருந்தாலும்
பிறவியறுத் தனைவர்க்கும்
முக்தி கொடுக்கும்நல்ல மூர்த்தியவ ரென்றார்
புலையர் - இத்தனைநாளு மிங்கே
இல்லாத வார்த்தையை
கற்றுவந்து
மென்ன கார்யமோ வென்றார்
நந்தனார் - இத்தனை நாட்சென்று
ஈசனடித் தாமரை
பக்தி
செய்யவரும் பாக்கியமீ தென்றார்.
____________
அகவல்.
பாக்கிய மீதென்று பரமசிவ
பக்தி
மார்க்கங்க ளொல்லாம் வரிசையாய்த் திரட்டி
எடுத்துரை செய்வார் ஈனமாஞ் சாதி
பிடித்தறி யாமல் பேசுவா ரன்றோ.
விருத்தம்.
புலையர் - வக்கணைக்காரா
நந்தா வாய்படப் பேச வேண்டாம்
சர்க்கரைபோலே
பேசி சாதித்துக் கண்ட தென்ன
நந்தனார் - பக்குவ காலம் வந்தால்
பரமனார் திருநாமந் தான்
சர்க்கரை போலே தோன்றும் சாதிப்பார்
முக்தி தானே.
|