திருநாளைப்போவார்4நந்தனார் சரித்திரக் கீர்த்தனை


உம்பர்பிரானுகந்து நறுமாங்கனி யளிக்க
உளந்தளராமலுண்ட முதல்வாதுய ரொளிக்க (கண)

தேஜோங்குநவரத்நச் சிகரமேலைக்கோ புரத்
தேவீற்றிருக்குமெங்கள் தேவாகுண்ட லாதர
பூஜித்தவர்க்குவரம் புரிந்தருளு மாதர
பூமிசைநாடகஞ்செய் புனிதவோம் ஹரஹர (கண)

_____________

புராணிகர் கூற்று.

எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.

வளம்பெருந் தரும மோங்கிய ஆத
      னூரினில் வாழ்ந்திடும் புலையர்
உளமகிழ்ந் தெங்கள் குடிப்பெயர் விளங்க
      வுதித்தநற் றீபமே மணியே
களங்கிலாக் கதிரே யெனப்புகழ்ந் தோதக்
      கதித்தசீர் நந்தனார் சரிதம்
விளம்பிட முதலிற் றோடயம் படித்து
     மேன்மையு மிகப்டைத் தனனே.

தோடயம்.

ராகம் - நாட்ட; தாளம் - ஆதி.

திருவளர்தருமாத னூரர் செறிபுலைக்குடிலவதாரர்
தருமநெறிநந்தனார்ப் பேரர் சரித்திர மதனைச் சொலவே-ஆ-ஆ
அருள்வளர்கஜமுக ஸ்வாமி அம்பிகைதந்தருளும் ஸ்வாமி
சங்குசக்கரதல ஸ்வாமி அம்புயத்தாணிதந்துணையே-ஜய-ஜய
வண்டணிமாமலர்த் தாரன் மண்டலம்வாழ்த்தியதீரன்
மண்டுமெளியர்க்கு தாரன் மன்னுங்கதைசொலவே-ஆ-ஆ