வசனம்.
புலையர்களனேகரானபடியால் பலவிதமாகச்
சொல்லுகிறார்கள்.
ஏசல்.
ராகம்-புன்னாகவராளி ; தாளம்-ரூபகம்.
புலையர் - ஆண்டிப்பரதேசி
யரகரவென்றவர்
வேண்டுந்தெய்வமது விளங்காது என்றார்
நந்தனார் - மூன்றுலகுக்கிறை
முன்னின்று கைகூப்பி
ஆண்டவனேயென்று அர்ச்சிக்கு மென்றார்
வேறொரு நாத்தைப்பிடுங்கியே
நடவுநட்டாலிந்த
புலையர் சோற்றுக்கவலைவிடும்
சுகமிது வென்றார்
நந்தனார் - கூற்றுவனார்வந்து
கூப்பிடும்வேளையில்
மாத்திரைப்பொழுதில்லை
மன்னுயி ரென்றார்
வேறொரு மாமனார்மக்களும்
வாழ்கின்றவிடத்திலே
புலையர் யானாலுமெப்போது மழுமூஞ்சி
யென்றார்
நந்தனார் - தேனாகவேமெத்தத்
தித்திக்கும்சிவஸ்துதி
யானாலுமுங்களுக் கழுகையோ வென்றார்
வேறொரு மூக்குநுனியைப்பார்த்து
முணுமுணுத்தென்னேரம்
புலையர் காக்கைபோலசும்மா
கதறுகிறீ ரென்றார்.
நந்தனார் - வாக்கிலேசிவநாமம்
வாராதபாவிகள்
நாக்கிலேவூசியை நாட்டுவே னென்றார்
வேறொரு மடவாயின்பறவைபோல்
பதியாமலிருக்கிறீர்
புலையர் துடைகாலிநீயென்று
சொல்லுவே னென்றார்
நந்தனார் - விடையேறுமீசனை வெட்டவெளியிலுன்னி
அடையாளங்காணாத ஆடுக ளென்றார்
வேறொரு மறையோதத்தெரியாத
மடையராய்ப் பூமியில்
புலையர் குறையாதபுலைத்தன்மை
கொண்டோமே யென்றார்
|