வசனம்.
அவர்களில் ஒரு புலையர், “எப்போதுஞ்
சிவனைக் கொண்டாடினால் நம்முடைய
தொழிலுக்குக்
கெடுதலுண்டு; பண்ணை விளையா” தென்று சொல்ல,
நந்தனார் அதற்குச்
சொல்லுகின்றார்:
தண்டகம்.
ராகம்-பூர்வகல்யாணி ; தாளம்-ஏகம்.
அரகராவென்றொரு
குழிநட்டால் அதுகலமே விளையும்
பாவம்-தங்காமற் றொலையும்
சிவசிவாவென்று
ஒருதரஞ்சொன்னால் ஜன்மசபலமாச்சு
புண்ணியகரும மதுவே யாச்சு
தில்லையம்பலத் தெரிசனங்கண்டால்
தேவரும்வருந்தாரோ
அந்த - மூவரும்பொருந் தாரோ
அடிமைக்காரத்தொழில் செய்வது துன்பமானாலுமேச்சே
ஜன்மம்-போனாலும் போச்சே
_________
வசனம்.
நந்தனார் புலையர்களைப்
பார்த்து, அனேகவிதமாய்ச் சொல்லி
நாளைப்போவேனென்று
சொல்லுகின்றார்:
நொண்டிச்சிந்து.
ராகம்-புன்னாகவராளி ; தாளம்-மிச்ர
ஏகம்.
நாளைப்போவேனென்றாராம்-அங்கே-நாடும்பறையர்க
ளோ
டிவந்து, அண்ணே நீ போகாதே-நமக் காண்டை பொல்
லாதவன் வேண்டிக்கொள்ளான், பார்ப்பாரச்
சாதியுண்டே.
|