வசனம்.
இப்படிச் சொல்லிய புலையரைப்
பார்த்து நந்தனார் சொல்லுகின்றார்:
ராகம்-ஜெஞ்ஜூடி ; தாளம்-ரூபகம்.
பல்லவி.
ஆண்டைக்கடிமைக்கார
னல்லவே-யான்
ஆண்டைக்கடிமைக்கார னல்லவே.
அனுபல்லவி.
மூன்றுலோகமும்
படைத்தளித்திடும்
ஆண்டவர் கொத் தடிமைக்காரன் (ஆண்டை)
சரணங்கள்.
ஆசைக்கயிற்றினி லாடிவரும்பசு
பாசமறுத்தவர்க் கடிமைக்காரன் (ஆண்டை)
தில்லைவெளிகலந்
தெல்லைகண்டேறி
தேறித்தெளிபவர்க் கடிமைக்காரன்
(ஆண்டை)
சீதப்பிறையணிந்
தம்பலத்தாடிய
பாதம்பணிபவர்க் கடிமைக்காரன்
(ஆண்டை)
வசனம்.
திருநாளைப்போவார் தன்னை
யடிமையாகக்கொண்ட வேதியர் சொற்
கேளாதவரல்லர். அப்படியிருந்தும், பக்தி பண்ணவேண்டுமென்று
பக்தி நெறியைச்
சொல்லிக்காட்டினார்.
விருத்தம்.
தவம்பெறு முனிவர் மெச்சுஞ்
சரித்திரங் கொண்ட நந்தன்
பவமயக் கறுக்க வேண்டிப் பகர்ந்திடுஞ் சிவவாக்கியத்தை
|