அவகுணங் கொண்டபேய
ரறிந்திடப்
போமோ வெல்லாஞ்
சிவன்செய லாகு நம்மாற் செய்வதொன்
றில்லை யென்றார்.
வசனம்.
திருநாளைப்போவார் அனேகவிதம்
சொல்லியும் புலையர் கேளாமலிருந்ததினால்
சிவன்செயலென்று அவர் சும்மா விருந்தார். அந்தச் சேரியில் புலையர் கூட்டங்கூடி
தம்முள் மூத்தோனால் நந்தனாருக்குப் புத்திசொல்வோம் என்று எண்ணி அங்கே
வெகுநாளாயிருப்பவனும் வயதுமிகுந்து உடலும் தளர்ந்து பல்லுகளுதிர்ந்து தோலும்
சுருங்கி நரம்புகள்
தெரிந்து முதுகும் சரிந்து முழுதும் வளைந்து அங்கம் சொரிபடர்ந்து
தினவு மிகுந்து
அதனைச் சொரிந்து அந்நீர் வடிந்து அவ்வுடல்
நடுங்கி இருப்பவனுமான
பெரிய கிழவன்
ஒருவனை யனுப்ப அவன் கோலூன்றிக் கூனிக் குறுகிக்
கோணலாய்
நடந்து வந்து
நந்தனாரைப் பார்த்துக் கட்டி யணைத்துத்
தலையும் நிமிர்ந்து கண்ணீர்
சொரிந்து மார்பில்
வழிந்து மனமும் கனிந்து
காதல் மிகுந்து ஒன்றுந்தெரியாத வரென்று
நினைந்து
பரிந்து
நியாயமறிந்து சொல்லுவார்:
_____________
ராகம்-பியாக் ; தாளம்-தேசாதி.
பல்லவி.
ஞாயந்தானோ நீர்
சொல்லும்-ஓய்-நந்தனாரே
நம்ம சாதிக்கடுக்குமோ.
சரணங்கள்.
சேரியில்லா
வழக்கம்-நீர்
செய்துகொண்டுவந்த
பழக்கம்-இந்த
|