ஊரிலெங்குமது
முழக்கம்-வெகு
உறுதியாச்சுது
ஒழுக்கம்-இது (ஞாய)
சிதம்பரமென்கிற
பேச்சு-நாங்கள்
செய்திடுங்காரியம்
போச்சு-அது
மதம்பிடித்ததுபோ
லாச்சு-இந்த
மண்டலப்பறையருக்
கேச்சு-இது (ஞாய)
பறையருக்கேதுதைப்
பூசம்-அதைப்
பார்க்கவேயுனக்கு
விச்வாசம்-சிறு
பயல்களுக்கேயுப
தேசம்-நீர்
பண்ணிவைத்ததெல்லாம்
மோசம்-இது
(ஞாய)
வசனம்.
அவன் சேரியில் பெரிய கிழவனானபடியாலும்
சாதி வழக்கங்களெல்லாம்
அறிந்தவனாதலாலும்
நந்தனாருக்கு இன்னமும் சொல்லுகிறான்:
நொண்டிச்சிந்து.
ராகம்-புன்னாகவராளி ; தாளம்-மிச்ர
ஏகம்.
பார்ப்பாரச்சாதியுண்டே-என்ன-பாடுபடுமுழுக்காடுமங்கே
நமக்குந்திருநாளோ-அந்த-ஞாயமுண்டோ என்னமாயமிது
வென்றேதடைசெய்தான்-சிவன்-வேடிக்கை
தானென்று நாடிக்கொண்டே
அறியாதுபோலிருந்தார்.
பெரியகிழவன் சொல்லியது.
விருத்தம்.
கழனியைத் தெய்வமெனச்
சுற்றிவந்து தலைவணங்கிக் கரங் குவித்து
உழுதுபரம் படித்துவிரை தெளித்துமுளை கொள்ளநீ
ரோட விட்டுப்
|