பழுதறவே நட்டதனைக் களைபிடிங்கி மடைதிறந்து
நீர்பாயவிட்டுச்
செழித்திடவே பொங்கலிட்டுக் காத்தவரா
யனைவேண்டுஞ் செய்கைதானே.
ராகம்-நாதநாமக்கிரியை ; தாளம்-ஆதி.
பல்லவி.
*சுவாமி தரிசனம்
நமக்குண்டோ புலைச்
சாதியன்றோவந்த நீதியறியாமல்.
அனுபல்லவி.
பூமிதெரிசனம் போதும் போதும்
வெகு
புண்ணியமே சோறுபோடுமின்ன மொரு
(சுவாமி)
சரணங்கள்.
நாத்து நரம்புகளைச்-சுமப்பதும்
உழுவதும்
நஞ்சை வயலைச்சுற்றி-வருவதும் வளம்பெற
பாத்தி கட்டிவிரை-தெளிப்பதும் பறிப்பதும்
பாயுமடையைத் திறந்-திடுவதும் அன்றியில்
(சுவாமி)
சேரியிடையில் குடி-யிருப்பதும்
பதறுகள்
சிதறத் தூற்றிநெல்-லளப்பதும்
பார்ப்பதும்
ஊரை வளைந்து தமுக்-கடிப்பதும் மதுக்குடம்
உண்டு களித்துநா-முறங்குவ தன்றியில்
(சுவாமி)
ஆண்டை மார்களிடும்-பணிவிடை
செய்வதும்
அருகில் நின்றுகும்-பிடுவதும் நடுவதுந்
தாண்டி நடந்துகோல்-பிடிப்பது மளப்பதும்
தனித்துச் சுடலைதினங்-காப்பது மன்றியில்.
(சுவாமி)
* இந்தக் கீர்த்தனையை நவீனர்கள் “ஆனந்தபைரவி” ராகத்திலும்
பாடுகிறார்கள்.
|