திருநாளைப்போவார்49நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

படிபுகழ்நந்தனார் மகிழ்ந்து பரமசிவபக்தி புரிந்து
கொடியவன் பாவங்கள் தீர்ந்து கூனிக்குறுகிக் கோணிநடந்து (பெரி)

நந்தனார்சொன்ன தத்வமறிந்து நானென் னகம்பாவ மிழந்து
பந்தமயக்கம் முழுதும்தெளிந்து பரவெளியாகவே நினைந்து. (பெரி)

வசனம்.

புலையர்களெல்லாங் கூட்டங்கூடி நந்தனாருக்குச் சிதம்பரப் பித்தந்தெளிய
புத்திசொல்லியனுப்பிய பெரிய கிழவன் நந்தனார் பித்துக்கொண்டு அவருடைய
மகிமையெல்லாம் புலையர்களிடத்திற் சொல்லிக்கொண்டாடி வருவான்.

பெரிய கட்கா.

ராகம்-நாதநாமக்கிரியை; தாளம்-ஆதி.

திருநாளைப்போவானிந்தச் சேரிக்குமூருக்கும்
யாருக்கும்பெரியவன் (திருநாளைப்)

ஒருதரமாகிலுஞ் சிவசிதம்பரமென்று
உரைத்திடீரென் றுண்மைகூறிய (திருநாளைப்)

அடாதுசெய்தால் - படாது படுவீர்
விடாது பாவம் - தொடாதே அவன்பே
ரிடாதே தூறு - படாதே கையிடி
படாதே வெம்பகை - யிடாதே அப்பா
த்ருடாங்கன் கோபம் - படாது பட்டால்
விடாது சலனப் - படாதவன் பயப்
படாதவன் இடம் - கொடாதவன் அடங்
கிடாதவன் நிலை - விடாதவன் மாறு
படாதவன் மனம் - கெடாதவன் குணம்
விடாதவன் மேல் - விடாது தொடரும்