புண்டரீகபுரத் தீசன் புராரியுளமகிழ் நேசன்
தண்டலர்மாமண வாசன் தாமரைத்தாள்
கடுணையே-ஜய-ஜய
______________
மங்களம்.
எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய
விருத்தம்.
சங்கரன் றனக்கும்
சண்முகன் றனக்கும் சதுர்முகப் பிரமனார் தமக்கும்
மங்கய மாற்கு மவர்மனை யாட்கும்
பார்மகட் பாவலர் தமக்கும்
தங்கிய வட்ட வசுக்களா னவர்க்கும் சதுர்மறை
யோதுமந் தணர்க்கும்
பொங்கிய மூவா யிரநந்த
னார்க்கும் பொதுப்பட மங்களம் புகல்வாம்.
ராகம் - அஸாவேரி; தாளம் -
சாபு.
பல்லவி.
ஆதிமத்தியாந்தனுக்கு மங்களம்
எங்கள்
ஆனந்தநந்தனார்க்கு மங்களம். (ஆதி)
அனுபல்லவி.
பாதிமதிநதியும் பாம்பும்புலி
யுரியும்
சோதிக்குழையணியுந் துலங்கவருள்
புரியும் (ஆதி)
சரணங்கள்.
சிலையைவடிவழகிற்
சிறந்தவொருபெண் ணாக்கி
சிலைவளைத்தபரசுராமன்கர்வத்தைப்
போக்கி
மலையைச்சுமந்துபெரு மடுவிலொருகாற் றூக்கி
மாநடனங்கள்செய்த மாயமானினையெய்த (ஆதி)
குருபரநாதருக்குங் குறமகட்பாக
ருக்கும்
அருணகிரிநாதனுக் கருள்செய்விசாக
ருக்கும்
ஒருமுருகாவென வுளங்களித்தவ
ருக்கும்
உம்பர்கோனுக்குகந்த வுயரரசினைத்தந்த (ஆதி)
|