திருநாளைப்போவார்51நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

யைக் கெடுக்கத் தலைப்பட்டீர்களே” யென்று கூறி மிகவுந் துன்பமடைந்து புலையர்
ஒருவர்க்கொருவர் சொல்லித் துயரப்படுகின்றார்கள்:

ராகம்-புன்னாகவராளி; தாளம்-சாபு.

பல்லவி.

நாம் என்ன செய்வோம் புலையரே இந்தப்
பூமியிலில்லாத புதுமையைக் கண்டோம். (நாம்)

சரணங்கள்.

நந்தனொருவனாலே யிப்படி யாச்சு
   நன்மையுந்தின்மையு மில்லாமற் போச்சு
சந்திக்குச்சந்தி கூத்தாட லாச்சு
    சாமியுமில்லாமல் எங்கேயோ போச்சு (நாம்)

கன்னற்கற்கண்டவ் வார்த்தைகேட் பாரோ
   காதிற்பட்டாலதைக் கருத்துட்கொள் வாரோ
மன்னார்சாமிக்குப் பூசைபோட் டீரோ
   மாரியாத்தாளெங்கே மறந்திடு வாளோ (நாம்)

சேரிக்குள்பதினொரு பேர்களுங் கெட்டார்
   செய்யுந்தொழில்முறை யாவையும் விட்டார்
ஊருக்குப் பெரிய கிழவனுட் பட்டார்
   உண்மையறியாமற் சிதம்பரந் தொட்டார் (நாம்)

___________

வசனம்.

சேரியில் துன்பமடைந்த புலையர்களைப் பார்த்து உங்கள் தெய்வத்துக்கு
வழக்கம்போலே பூசை போட்டு பலி