யிட்டு வேண்டினால் சேரிக்கு நல்லகாலம்
பிறக்குமென்று பெரிய கிழவன்
சொல்ல,
புலையர்கள் பூசைபோடுந் தெய்வங்களாவன.
கட்கா.
ராகம் - எதுகுலகாம்போதி ;
தாளம்-ஆதி.
வீரன்-இருளன்-காட்டேரி-வெறியன்-நொண்டி-சாமுண்டி
தூறித்தூண்டி-நல்லண்ணன்-தொட்டியச்சின்னான்-பெத்தண்ணன்
மாரிமுனியன்-சங்கிலியும்-மாடன்-கறுப்பன்-பாவாடை
மூறிக்காத்தான்-குழியிரிசி-மோகினிசப்த-கன்னிகையும்
சேரிமன்னாரன்-மின்னடியான்-சிறுபாட்டுடையான்-பனைமரத்தான்
மாரியாண்டி-வழிமறித்தான்-மலையன்-சாத்தான்-பக்கிரியும்
ஏரியம்-சினும்பாயி-இடையன்-நல்லான்-பேயன்-ஊமையொடு
வீறுங்கல்லன்-பெத்தாச்சி-வீட்டுத்தெய்வம்
முதலான.
வசனம்.
இவைகளைத் தெய்வமென்று வணங்கிக்
கொண்டாட ஏனங்கோழி ஆடுகளுடனே
மதுக்குடம்வைத்து பள்ளயம் போட்டு பம்பையடித்து
வருந்தச் சன்னதம்வரும்
சொன்னேன், சேரிக்கு நல்லகாலம் பிறக்கும்
சிதம்பர பித்து நந்தனாருக்குத்
தெளிந்துவிடுமென்றும் பேர்பெருக வாழ்வீரென்றும்
பெரியகிழவன்
சொன்னாரே
அப்படியே கிழவன் சொல்லில் நம்பிக்கைகொண்டு
புலையர்களெல்லாரும் பந்தலிட்டுப்
பள்ளையம்போட்டு
கொம்பு தம்பட்டமுழங்கி முப்பூசை யிட்டு வேண்டுவார்கள்.
இருசொல்லலங்காரம்.
புலையர் - எல்லைப்பிடாரியே
எதிராகவந்தெமது
கொல்லையுன் ஆவலாய்க் கொள்ளடி
யென்றார்
|